உணர்வுகளின் மொழியே காதல் ........






எனக்கு பிடித்தவைகளே
உனக்கு பிடிக்கவேண்டும்
என்பல்ல காதல் . . . 
உனக்கு பிடிக்காதவைகள்
எனக்கு பிடித்திருந்தும்
என்னை பிடிக்கும் என்பாயே
அதுவே காதல் !

உன்னை பற்றி நானும்
என்னை பற்றி நீயும்
தெரிந்து கொள்வதல்ல
காதல் . . . 
நம்மைப் பற்றி நமக்கே
தெரியாதவைகளை
தெரியவைப்தே காதல் !

எல்லைகளை மீறுவதல்ல
காதல் . . .
நமக்குள் எல்லையே இல்லாமல்
இருப்பதே காதல் !

கற்பு நெறிக்கு உட்பட்டதல்ல
காதல் . . .
கற்புக்கு நெறிமுறைகளை
வகுத்ததே காதல் !

நட்பை விட உயர்ந்ததா தாழ்ந்ததா
என்பதல்ல காதல் . . .
நட்பை தன்னை விட உயர்ந்த
இடத்தில் வைத்து பெருமைப்படுத்துவதே
காதல் !

மொழிகளால் உணர்ந்து
கொள்ளக்கூடியதல்ல காதல் . . .
உணர்வுகளின் மொழியே
காதல்.....



நிஐமான காதல் .....





காதலிக்கத் தெரிந்த 
உனக்கு 
காதலைச் சொல்ல 
                   துணிவில்லை.................. 

      கண்களால் பார்க்கத் தெரிந்த 
உனக்கு 
      பேசுவதற்கு வார்த்தைகள் 
           தெரியவில்லை....................... 

மனதைக் கலைக்கத் 
தெரிந்த உனக்கு 
என் மனதின் விருப்பத்தை 
அறிய முடியவில்லை........... 

அதனால் தான் 
கேட்கின்றேன் 
நீ என்னைக் காதலித்தது 
நிஐம் தானா??? 

நிஐமென நம்பி வாழ்ந்த 
நான் இன்று 
உன் நிழலைத் தேடி 
அலைகிறேன்........... 

ஏனெனில் 
நான் உன் மேல் 
கொண்டது 
நிஐமான காதல்!!!!



பிறந்திருப்பேன் உனக்காக .....





நித்தமும் மனதில்
எத்தனை போராட்டம் 
இத்தனை காலம் வரை
குறையாத மனத் துயரம் 
சுகமான சுமையாக 
தொடர்ந்து நடக்கின்றேன் .
 
விரும்புகிறேன்  அனுதினமும் 
சொல்வதற்கு உன்னிடம் 
புரியவேண்டும் என் மனதை 
அறியவேண்டும்  அன்பினை .
 
விரும்பவேண்டும்  நீஎனை 
கேட்கிறது ஆசைமனம்
ஆனாலும் வேண்டாம் 
என்கிறது அறிவுமனம் .
விரும்புவதால் படும்துன்பம் 
வேண்டாம் உனக்கென்று.
 
மனதிலும் நினைக்கவேண்டாம் 
உறவாக என்னை 
எனை உருக்கும் என் துன்பம் 
உன்னை நினைத்தால் 
பறந்தோடும்.- ஆனால் 
உனை வருத்தும் உன்  துன்பம் 
உயிரின்றி  எனை அழிக்கும்.
 
முடிந்தால் மறுபடியும் 
பிறந்திருப்பேன் உனக்காக 
துணையாக எனை நீ
தொடர்ந்து வந்தால்..



எப்போது சொல்வாய்................




ஒரு பார்வையால் 
ஓராயிரம்  
கதை சொல்லி 
என்னை பதறவைக்கும் 
உன் கண்கள் பிடிக்கும் ....

நிலவுக்குள் 
மின்னலடித்தது போல் 
என்னை நோக்கி 
நீ வீசும் உன் 
புன்னகை பிடிக்கும் ....

நள்ளிரவில் தெரியும் 
நட்சத்திரமாய் 
உன் கூந்தலில் 
ஒய்யாரமாய் 
உட்கார்ந்திருக்கும் 
ஒற்றை ரோஐh 
பிடிக்கும் ....


தேர் கொண்ட 
பார்வையால் நான் 
பார்க்கும் போதெல்லாம் 
நானிக் கவிழும் 
உன் பெண்மை 
பிடிக்கும் ....

உன்னில் எல்லாம் 
எனக்கு பிடித்துப்போக 
நீ எப்போது 
உன் செல்விதழால் 
சொல்வாய் 
என்னை பிடிக்குமென்று !!!!!!!!!!!!!! 



என்னவள் .....





யுக யுகமாய் 
உன்னைக் 

காதலித்திருக்கிறேன் 

போலும்.. 
அதனால்தான் 

உன்னைக் 

கண்ட நொடியில் 
யாரிவள் 

எனக்கேட்காமல் 
உன்னவள் 
      என்றது எனது மனது ....



புரியவில்லையா பெண்ணே .....





அன்பே ! 

நீ ரசித்து கொண்டு இருப்பது 

பனி துளி அல்ல 

என் காதல் வலியை கண்ட நிலா 

இரவு முழுவதும் 
சிந்திய கண்ணீர் துளி ....., 

என் விழி மூடும் நேரத்தில் வருகின்ற 

நிலவுக்கு புரிகிறது என் காதல் , 
என் விழிகளாக வாழ்கின்ற உனக்கு 

புரியவில்லையா பெண்ணே !





 

என் காதல் நினைவுகள் ....




என்னவளே  !!! 

உன் நினைவுகள் -என்னுள் 
இருக்கும் வரை -நம் 
காதல் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கும் !!! 

உன் நினைவுகளே -நான் 
உயிர் வாழ காரணம் !!!! 

நம் காதல் நினைவுகள் -என்னுள் 
இருக்கும் வரை நம் காதலுக்கு 
மரணமில்லை !!!! 

இன்னொரு ஜென்மம் என ஒன்று 
இருந்தால் அப்பிறவியும் உனக்கு மட்டுமே !!! 

உன்னுடன் வாழ்ந்த நினைவுகளை விட 
உன்னை பிரிந்த நிமிடங்களில் தான் 
உன் மீது நான் கொண்ட காதலின் 
ஆழத்தை என்னால் உணர முடிந்தது !!! 

என் காதல் உண்மை என்றால் -நான் 
உனக்கு மட்டுமே சொந்தமாவேன் !!! 

இல்லையேல் மண்ணோடு மண்ணாவேன்!!!