காதல் .......................





எனக்கு பிடித்தவைகளே
                                                                        உனக்கு பிடிக்கவேண்டும் என்பல்ல காதல் . . . 
                                                                 உனக்கு பிடிக்காதவைகள்
                                                     எனக்கு பிடித்திருந்தும் என்னை பிடிக்கும் என்பாயே அதுவே காதல் !
                                          உன்னை பற்றி நானும் என்னை பற்றி நீயும் தெரிந்து கொள்வதல்ல காதல் . . . 
                                            நம்மைப் பற்றி நமக்கே தெரியாதவைகளை தெரியவைப்தே காதல் ! 
                                                    எல்லைகளை மீறுவதல்ல காதல் . . .
                                                         நமக்குள் எல்லையே இல்லாமல்இருப்பதே காதல் !
                                                         கற்பு நெறிக்கு உட்பட்டதல்ல காதல் . . .
                                                     கற்புக்கு நெறிமுறைகளை வகுத்ததே காதல் !
                                             நட்பை விட உயர்ந்ததா தாழ்ந்ததா என்பதல்ல காதல் . . .
                               நட்பை தன்னை விட உயர்ந்த இடத்தில் வைத்து பெருமைப்படுத்துவதே காதல் !
                                                மொழிகளால் உணர்ந்து கொள்ளக்கூடியதல்ல காதல் . . .
                                                     உணர்வுகளின் மொழியே காதல் .......................


                  



என் உயிரே ..............



என் உயிரே உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்... 


இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை... 
என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்... 

எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை 
என்னை விட்டு நீ பிரியும் காலம் வந்தால்... 
புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்....


உன் நினைவுகள் என்றும் சுகமானதே………!



யார் வந்து பேசினாலும் உன்
குரலே கேட்கிறது…………..!
யார் முகம் பார்த்தாலும் உன்
முகமே தெரிகிறது…………...!
இது தான் காதல் என்பதா…!
சுகமாய் நினைத்தவை இன்று
சுமையானது போல் சுகமாய்
நினைக்கும் உன் நினைவுகள்
என்றும் சுகமானதே………!!