எனக்கு பிடித்தவைகளே
உனக்கு பிடிக்கவேண்டும் என்பதல்ல காதல் . . . உனக்கு பிடிக்காதவைகள்
எனக்கு பிடித்திருந்தும் என்னை பிடிக்கும் என்பாயே அதுவே காதல் !
உன்னை பற்றி நானும் என்னை பற்றி நீயும் தெரிந்து கொள்வதல்ல காதல் . . .
நம்மைப் பற்றி நமக்கே தெரியாதவைகளை தெரியவைப்பதே காதல் !
எல்லைகளை மீறுவதல்ல காதல் . . .
நமக்குள் எல்லையே இல்லாமல்இருப்பதே காதல் !
கற்பு நெறிக்கு உட்பட்டதல்ல காதல் . . .
கற்புக்கு நெறிமுறைகளை வகுத்ததே காதல் !
நட்பை விட உயர்ந்ததா தாழ்ந்ததா என்பதல்ல காதல் . . .
நட்பை தன்னை விட உயர்ந்த இடத்தில் வைத்து பெருமைப்படுத்துவதே காதல் !
மொழிகளால் உணர்ந்து கொள்ளக்கூடியதல்ல காதல் . . .
உணர்வுகளின் மொழியே காதல் .......................


0 comments:
Post a Comment