உணர்வுகளின் மொழியே காதல் ........






எனக்கு பிடித்தவைகளே
உனக்கு பிடிக்கவேண்டும்
என்பல்ல காதல் . . . 
உனக்கு பிடிக்காதவைகள்
எனக்கு பிடித்திருந்தும்
என்னை பிடிக்கும் என்பாயே
அதுவே காதல் !

உன்னை பற்றி நானும்
என்னை பற்றி நீயும்
தெரிந்து கொள்வதல்ல
காதல் . . . 
நம்மைப் பற்றி நமக்கே
தெரியாதவைகளை
தெரியவைப்தே காதல் !

எல்லைகளை மீறுவதல்ல
காதல் . . .
நமக்குள் எல்லையே இல்லாமல்
இருப்பதே காதல் !

கற்பு நெறிக்கு உட்பட்டதல்ல
காதல் . . .
கற்புக்கு நெறிமுறைகளை
வகுத்ததே காதல் !

நட்பை விட உயர்ந்ததா தாழ்ந்ததா
என்பதல்ல காதல் . . .
நட்பை தன்னை விட உயர்ந்த
இடத்தில் வைத்து பெருமைப்படுத்துவதே
காதல் !

மொழிகளால் உணர்ந்து
கொள்ளக்கூடியதல்ல காதல் . . .
உணர்வுகளின் மொழியே
காதல்.....



நிஐமான காதல் .....





காதலிக்கத் தெரிந்த 
உனக்கு 
காதலைச் சொல்ல 
                   துணிவில்லை.................. 

      கண்களால் பார்க்கத் தெரிந்த 
உனக்கு 
      பேசுவதற்கு வார்த்தைகள் 
           தெரியவில்லை....................... 

மனதைக் கலைக்கத் 
தெரிந்த உனக்கு 
என் மனதின் விருப்பத்தை 
அறிய முடியவில்லை........... 

அதனால் தான் 
கேட்கின்றேன் 
நீ என்னைக் காதலித்தது 
நிஐம் தானா??? 

நிஐமென நம்பி வாழ்ந்த 
நான் இன்று 
உன் நிழலைத் தேடி 
அலைகிறேன்........... 

ஏனெனில் 
நான் உன் மேல் 
கொண்டது 
நிஐமான காதல்!!!!



பிறந்திருப்பேன் உனக்காக .....





நித்தமும் மனதில்
எத்தனை போராட்டம் 
இத்தனை காலம் வரை
குறையாத மனத் துயரம் 
சுகமான சுமையாக 
தொடர்ந்து நடக்கின்றேன் .
 
விரும்புகிறேன்  அனுதினமும் 
சொல்வதற்கு உன்னிடம் 
புரியவேண்டும் என் மனதை 
அறியவேண்டும்  அன்பினை .
 
விரும்பவேண்டும்  நீஎனை 
கேட்கிறது ஆசைமனம்
ஆனாலும் வேண்டாம் 
என்கிறது அறிவுமனம் .
விரும்புவதால் படும்துன்பம் 
வேண்டாம் உனக்கென்று.
 
மனதிலும் நினைக்கவேண்டாம் 
உறவாக என்னை 
எனை உருக்கும் என் துன்பம் 
உன்னை நினைத்தால் 
பறந்தோடும்.- ஆனால் 
உனை வருத்தும் உன்  துன்பம் 
உயிரின்றி  எனை அழிக்கும்.
 
முடிந்தால் மறுபடியும் 
பிறந்திருப்பேன் உனக்காக 
துணையாக எனை நீ
தொடர்ந்து வந்தால்..